
பிரபல ரவுடி “ரஷ்” ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

திருச்சி வயலூர் ரோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக கிடைத்த புகார் அடிப்படையில் ரஷ் ராஜா என்கிற கார்த்திக் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 19 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து அவரை குண்டத்தொடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
