NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

 திருச்சி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர் கைது!

0
1

 திருச்சி ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர் கைது!

திருச்சி இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் மோகன சுந்தரி தலைமையிலான போலீசார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4

அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை மடக்கி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மூன்று கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது அவர் சென்னை அம்பத்தூர் கவர தெரு தில்லை முத்து மகன் கலைச்செல்வன் என்பது தெரிய வந்தது .
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.