
திருச்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு!
டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக முஸ்லிம்கள் அனுசரித்து வருகின்றனர்.

இந்நாளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கம். அதே வகையில் தற்போது திருச்சி மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் நிலையங்கள்,ரயில் நிலையம்,விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே இருப்பு பாதை காவல் படை இணைந்து. ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் டிக்கெட் கவுண்டர் பார்சல் சர்வீஸ் பிளாட்பாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினார்.
ரயில் நிலைய நுழைவாயிலில் பயணிகள் கொண்டுவரும் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதே போலவே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
