
மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
லால்குடி திண்ணியம் தேவன்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி.

இவரது உறவினர்கள் ராம்குமார்(26). நகுலேஷ்(6).
இவர்கள் மூவரும் மோட்டார் பைக்கில் திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். லால்குடி மாந்துறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சையது முஸ்தபா மகன் ஆரிப் அகமது லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அகிலாண்டபுரம் பகுதியில் மோட்டார் பைக் மீது கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
