
திருச்சியில் 3 பேர் மாயம்! போலீசார் தீவிர விசாரணை
மாணவி மாயம்
திருவரம்பூர் எழில் நகரை சேர்ந்தவர் முகிலன். இவரது மகள் “பெல்” பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மாணவியின் தாயார் நதியா, அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்

சமயபுரம் பள்ளிவிடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் ரேணுகாதேவி (22). எம்.எஸ்.சி முடித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற ரேணுகாதேவி, வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செவிலியர் மாயம்
துவாக்குடி அருகே உள்ள பழங்காணங்குடியை சேர்ந்தவர் எடிசன் மகள் பிரித்திகா வயது (23). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை . இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
