
செயின் பறித்தவருக்கு வலை
திருச்சி,டிச.6-

திருச்சி மேலப்பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவிராஜ் (23 ).
நந்தகுமார் ( 26) இருவரும் அப்பகுதியில் மது அருந்தினர்.
அங்கு வந்த தில்லை நகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கவிராஜிடம், மது அருந்த பணம் கேட்டார்.
கவிராஜ் பணம் தர மறுக்கவே அருகில் இருந்த பீர்பாட்டிலால் கவிராஜை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த இரண்டு சவரன் செயினை மணிகண்டன் பறித்து சென்றார்.
இதுகுறித்து கவிராஜ் உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை வலை வீசி தேடி வருகின்றனர்.
