
சீட்டாட்டியவர்கள் கைது

திருச்சி,டிச. 6-
திருச்சி எடமலைப்பட்டி புதூர்
ரெட்டமலை கருப்பு கோயில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கிராபட்டியைச் சேர்ந்த சாமுவேல், செல்வராஜ், மணி, ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பாபு, கருப்பு கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் நிக்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து விளையாட பயன்படுத்தப்பட்ட சீட்டு கட்டு மற்றும் 870 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
