
கார்த்திகை தீப திருவிழா! கோயில்களில் கோலாகலம்!
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோவில் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுரத்தின் மீது பொருத்தப்பட்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்,வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்தோடு பக்தி பரவசத்துடன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பொதுமக்கள் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்து மகிழ்ந்தனர்.
