
லாட்டரி விற்றவர் கைது

திருச்சி,டிச.6-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சங்கரன்பிள்ளை சாலை மற்றும் பாலக்கரை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பொன்மலைபட்டியைச் சேர்ந்த சரவணன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு மொபைல் போன் 200 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
