
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவிகள்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 150 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.

இதில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சுவாதிஸ்ரீ, சண்முகப்பிரியா ஆகியோரின் படைப்பான “அரங்கூரில் வாழும் ராஜகம்பளா சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை ஆய்ந்து அறிதல்” (“To Study the Life Style of Rajakambala Community Living”) என்ற படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து இம்மாணவிகள் டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இருமாணவிகளும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
