
கத்தியை காட்டி மிரட்டிய
ஆசாமி கைது
திருச்சி,டிச.6-

திருச்சி பொன்னேரிபுரம் பகுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன்.
இவர், எல்லை மாரியம்மன் கோவில் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை தாக்கிய மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த 900 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டதுடன் அவரை கீழே தள்ளிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றார்.
இது குறித்து சத்தியநாராயணன் பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சத்தியராஜ் கைது செய்யப்பட்டார்.
