
உண்டியலில் திருட்டு
திருச்சி,டிச.6-

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோவில் அறங்காவலராக பணியாற்றி வருபவர் குலோத்துங்கன்.
வயது 66.
நேற்று முன்தினம் 04.12.2022 அன்று கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த போது கோவிலுக்குள் உண்டியலை உடைத்து முதியவர் ஒருவர் பணத்தை திருடி கொண்டிருந்தார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பொன்மலை காவல் நிலையத்தில் குலோத்துங்கன் ஒப்படைத்தார்.
விசாரணையில் உண்டியலில் திருடியவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் வயது 60 என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டாரா என விசாரித்து வருகின்றனர்.
