
இரத்ததான தன்னார்வலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு!
டிசம்பர் -06 உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பும் இரத்ததான தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு அதிகமான இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தமைக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் (DYFI Blood donors club)க்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களால் பாராட்டு சான்றிதழும், பதக்கமும் மாவட்ட தலைவர் பா. லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர்
