
கேபிள் ஒயரால் வந்தது வினை
திருச்சி,டிச.6-
திருச்சி கருமண்டபம் ஜெயநகர் 5வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிந்தாமணி.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சேவியர்.
சேவியர் வீட்டின் வழியாக சிந்தாமணி வீட்டிற்கு கேபிள் ஒயர் வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தாமணியிடம்,
சேவியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் சேவியர், சிந்தாமணியை தாக்கினார்.

இது குறித்து சிந்தாமணி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
