
திருச்சியில் உடல்நலக்குறைவால் மனவிரக்தியில் பெண் தற்கொலை!
மண்ணச்சநல்லூரை அடுத்த காளவாய்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
மனைவி மேகலா( 34). சிறுநீரக பிரச்னை காரணமாக மேகலா, அவதிப்பட்டார்.

மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாததால், விரக்தி அடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
