
திருச்சியில் ஆட்டோ சங்க நிர்வாகிகளுக்கான விளக்க கூட்டம்!
சட்ட ஆலோசனைகளும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான விளக்க கூட்டம் திருச்சியில் நடந்தது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கோபி ,
மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலிதாஸ்,மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மூத்த வழக்கறிஞர் போஜகுமார், வழக்கறிஞர் ஆதிநாராயண மூர்த்தி, தாஜுதீன், ராஜன் மக்கள் கலை இலக்கிய கழகமாவட்ட செயலாளர் ஜீவா, உட்பட பலர் பேசினர்.
மக்கள் அதிகாரத்தின் கலைக்குழுவை சேர்ந்த நிர்மலா, கார்க்கி, லதா, சரவணன் ஆகியோர் பாடல்கள் பாடினர். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க ஶ்ரீரங்கம் பகுதி புதிய நிர்வாகிகள் தலைவர் வைத்தீஸ்வரன். செயலாளர் ராகவன். கிளை நிர்வாகிகள் சரவணன் , அருண், செந்தில், முத்துக்கிருஷ்ணன் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
