
திருச்சி அருகே விபத்தில் சிக்கிய கல்லூரி பேருந்து! 10 பேர் காயம்
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே, தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மாணவ மாணவிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே சைக்கிளில் சென்ற நபர் மீது மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் கண்ணதாசன் பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் மாணவ மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர்.
பேராசிரியை ஒருவருக்கு கால் எலும்பு உடைந்தது.
நாவல் பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
