
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முசிறியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் விஜய் பாபு தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பாலகுமார் ,பொருளாளர் ஆனைமுத்து ,ஒன்றிய செயலாளர் சத்யராஜ், ஒன்றிய பொருளாளர் முருகானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் காதர்உட்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சிகளில், தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர் போன்ற பணியில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும்.

மாநகராட்சியில் நீண்ட காலமாக பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. யுவராஜ் நன்றி கூறினார்.
