
திருச்சியில் கஞ்சா கடத்திய இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் பகுதியில் 55 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டஹள்ளியை சேர்ந்த சீனிவாசன், சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர், ஆகிய இருவரை கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
