
யானை தந்தம் விற்பனை மணப்பாறை ஆசாமி கைது!
யானைத் தந்தங்கள் விற்பனை தொடர்பாக தேடப்பட்ட நபர் திருச்சி மணப்பாறையில் கைது செய்யப்பட்டார்

கடந்த 2021 ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் யானை தந்தங்களை விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் சிலர் தலைமறைவாக இருந்தனர் . இது குறித்து தர்மபுரி மாவட்ட வன பாதுகாப்பு படை அதிகாரிகள் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் விற்றதில் தொடர்புடைய 17 வது குற்றவாளியான மணப்பாறையை அடுத்த சுக்காம்பட்டியை சார்ந்த கந்தசாமி என்பவரை திருச்சி வன பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் தர்மபுரி அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
