
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் அமைச்சர் திறந்து வைத்தார்!
சோழமாதேவி- கீழக்குறிச்சி இணைப்பு சாலையில் உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே ரூ. 80 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஒன்றிய செயலாளர். கங்காதரன், ஒன்றிய தலைவர் சத்யா கோவிந்தராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
