கூட்டாளிகளுக்குள் உள்குத்து போலீஸ் விசாரணை…

கூட்டாளிகளுக்குள் உள்குத்து போலீஸ் விசாரணை…
திருச்சி கருமண்டபம் நேரு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது சகோதரி வெள்ளையம்மாள், கருமண்டபம் அசோக்நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வணிக வளாகத்தை வெள்ளையம்மாள் பெயருக்கு தர்மராஜ் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அந்த வணிக வளாகத்தில் வெள்ளையம்மாள் மகன் சுரேஷ் சொந்தமா அரிசி மாவு அரவை ஆலை வைத்து நடத்தி வந்தார்.தர்மராஜின் மகன் பிரபுதாஸ்(25), மாவு அரவை ஆலையில் பங்குதாரராக இணைந்தார்.

இதைத்தொடர்ந்து ஆலைக்கு இந்திரங்கள் வாங்குவதற்காக வங்கியில் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். மேலும் அரவை ஆலை பயன்பாட்டுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவற்றை சுரேஷ் பெயரில் வாங்கியுள்ளனர்.
மேலும் ரூ. 10 லட்சத்தை சுரேஷின் வங்கி கணக்கில் பிரபுதாஸ் செலுத்தியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது. இதில் அரவை ஆலையில் இருந்த சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான அரிசி உள்பட மொத்தம் ரூ. 33 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சுரேஷ் எடுத்துக்கொண்டு சென்றார்.

இது தொடர்பாக பிரபுதாஸ், திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
