
திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேருக்கு காப்பு!
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் சாலை பகுதியில் மீன் கடை நடத்தி வருபவர் பக்ருதீன்.

அதே பகுதியைச் சேர்ந்த குலாம்தஸ்தகீர் வெங்கடேசன், கருப்பையா என்கிற மகேந்திரன் ஆகிய மூவரும் பக்ருதீனிடம் கத்தியை காட்டி மிரட்டி 1000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த பக்ருதீன் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
