
திருச்சி அருகே பட்டப்பகலில் டூ வீலர் மாயம்! மர்மநபருக்கு போலீஸ் வலை
மணப்பாறையை சேர்ந்தவர் காதர் மைதீன். பேருந்து நிலையம் அருகே ஜூஸ் கடைக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து பார்த்த பொழுது தனது இரு சக்கரம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
