
செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேர் கைது!

ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ராஜ்குமார் (19). ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை வழிமறித்த இரண்டு பேர், அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ஸ்ரீரங்கம் போலீசார், ஸ்ரீரங்கம் சிங்கர்கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் ( 21), ஹரிஹரன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
