
திருச்சியில் பாமக நிர்வாகிகள் கூட்டம்!
திருச்சி வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம் முசிறியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வீரராகவன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சி செயல்பாடுகள் குறித்து மாநில பொருளாளர் திலகபாமா சிறப்புரையாற்றினார். முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். முசிறியில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும்.
துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திலகபாமா பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் .
