NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பா? உறவினர்கள் ஆவேசம்

0
1

போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பா? உறவினர்கள் ஆவேசம்

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையை சேர்ந்தவர்
சுயம்புலிங்கம் ( 54 ). கடந்த மாதம் 26 ம் தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் அவரது மருமகன் மணிகண்டன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுயம்புலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த சுயம்புலிங்கம், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலை சரியாகாத நிலையில் திருச்சி மாருதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில்
இறந்தார்.

4

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மாருதி மருத்துவமனை
முன் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸ் தாக்கியதால் தான் சுயம்புலிங்கம் பலியானதாகவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து பேட்டி அளித்த பாமக மாநில செயலாளர் திருமாவளவன்,
போலீசார் தாக்கியதால்தான் சுயம்புலிங்கம் இறந்தார். எனவே அவரது இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3

இறந்த அவரது குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பாமக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.