NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் தொடரும் தற்கொலைகள்… இன்று மட்டும் 3 பேர்

0
1

திருச்சியில் தொடரும் தற்கொலைகள்… இன்று மட்டும் 3 பேர்

 

  • திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த நாக ரத்தினம் மகள் அபிராமி (17). தில்லை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட,அவர் விஷம் குடித்து சத்திரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
    அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
    அங்கு அவர் இறந்தார். கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

4
    • திருச்சி அரியமங்கலம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (27 ). திருமணமாகி பத்து மாதங்கள் மட்டுமே ஆகிறது . குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.  இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

  • திருச்சி மாவட்டம் கல்லக்குடி காரையாம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் 48 குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட துக்க நிகழ்வுகளால் மனம் உடைந்த இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டால்மியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்
சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.