
திருச்சியில் அனுமதியில்லாத கட்டுமானத்துக்கு அதிகாரிகள் சீல்
உரிய அனுமதியில்லாமல் கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் புதிய மூன்று அடுக்கு மாடி கட்டடம் அதை சார்ந்த வணிக வளாகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளுக்கு மாநகராட்சியிடமிருந்து முறையான ஒப்புதல், வரைபட அனுமதி, கட்டுமான அனுமதி, அப்ரூவல் போன்றவை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த கட்டுமான பணிகள் குறித்து தகவல் அறிந்த உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் குமரேசன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
இதில் கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் பழைய வீடு ஒன்று இருந்ததும், அந்த வீட்டை இடித்து தற்போது மூன்றடுக்கு வளாகமாக மாற்றி கட்டட வேலை நடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டடத்தை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
