
அதிமுக சார்பில் திருச்சி மாவட்டத்தின் 22 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்!
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி மாவட்டத்தின் 22 இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்ட அறிக்கை:
திமுக அரசை கண்டித்து அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி 9.12.2022 நாளை பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே, தொட்டியம் வானப்பட்டறை அருகே, காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, தா.பேட்டை கடைவீதி, சமயபுரம் சந்தை கேட், உப்பிலியாபுரம் அண்ணாசிலை, கணபதிபாளையம்,பி.மேட்டூர் ஆகிய இடங்களில் ஆர்பாட்டம் நடக்கிறது.
வரும் 13 ம் தேதியன்று துறையூர் பேருந்து நிலையம், முசிறி கை காட்டி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச், திருவானைக்காவல் 14 ம் தேதியன்று ஜீயபுரம் பேருந்து நிலையம், அல்லித்துறை திடல், கொட்டப்பட்டு, மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம் கடைவீதி, பாலசமுத்திரம், துறையூரில் முசிறி பிரிவு ரோடு, உப்பிலியாபுரம் எரக்குடி, ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்பாட்டங்களில் அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
