
திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்!

திருச்சி மாவட்டம் புலிவலத்தை அடுத்த சீரங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள், துறையூரில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் டிப்ளமோ பயின்று வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
