
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது!
அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக வரும் (16 .12 .2022) அன்று திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் பகுதியிலும் மணப்பாறை தொகுதியில் மணப்பாறை நகரம் அக்ரகாரத்திலும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே .என். சேகரன், வண்ணைஅரங்கநாதன், பி எம் சபியுல்லா
தொகுதி செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
