
குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருவெறும்பூர் கடைவீதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மண்டல் தலைவர்கள் பாண்டியன், செந்தில்குமார், தலைமை வகித்தனர். ஓ.பி.சி அணி மாநில துணை தலைவர் சரவணன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், மண்டல் நிர்வாகிகள் மனோகரன், ராம்கி, காந்திநகர் குமார், மோகன், பூக்கடைசிவா, ரவிகுமார், வெங்கட், ராதாகிருஷ்ணன், மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
