
திருச்சியில் சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடத்தில் காங்கிரசார்!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் திருச்சியில் நடைபெற்றன.
இதையொட்டி திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சரவணன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மகளிர் அணி அஞ்சு, வழக்கறிஞர் பிரிவு சிவகாமி, இளைஞர் காங்கிரஸ் முகமது ரபிக், மாவட்ட நிர்வாகிகள் நிர்மல் குமார் , சந்துகடை சம்சுதீன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, சண்முகம்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அருணாசல மன்றம்
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அருணாச்சலம் மன்றத்தில் கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , மாநில பொதுச் செயலாளர் முரளி
கோட்டத் தலைவர்கள சிவாஜி ,சண்முகம் ,ரவி, ராஜ்மோகன் ,ஜோசப் ஜெரால்ட்டு, மாவட்ட துணைத்தலைவர்கள் வில்ஸ் முத்துகுமார், புத்தூர் அன்பழகன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா உறையூர் எத்திராஜூ அண்ணா சிலை விக்டர் மலைக்கோட்டை சேகர் சரவண சுந்தர் கல்லுக்கழி விஜயா புத்தூர் சீனி மணிவேல் மாவட்ட செயலாளர்கள் செல்வம் ஜீவா நகர் ராஜா மகளிர்அணி விஜயலட்சுமி கோகிலா ரோஸ்லின் மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
