
தப்பிய கஞ்சா கருப்பு! போலீஸ் வலை

துவரங்குறிச்சி கடைவீதி மதுக்கடை அருகே துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா. தனிப்பிரிவு காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கஞ்சா விற்ற காமன் கோயில் தெருவை சேர்ந்த
அப்துல் வாகித் (20) தப்பியோடினார். இதையடுத்து அவரது வீட்டுக்குச் போலீஸார் சென்று அங்கிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பிய அப்துல் வாகித்தை தேடுகின்றனர்.
