
குடிகாரசேவை: 2 பேர் கைது

திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர். முசிறி மணமேடு காட்டு பாலம் அருகில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர்.
இதில் கல்லுபட்டியைச் சேர்ந்த பிரகாஷ்( 35) பூலாஞ்சேரியை சேர்ந்த பெரியசாமி(52) பிடிபட்டனர் . அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
