NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி அருகே தாசில்தார் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு!

0
1

திருச்சி அருகே தாசில்தார் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு!

 

வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4

மணப்பாறை நகரில் சாலையோரம் வசிப்பவர்கள், புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் ஒன்று திரண்டு தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டு மனை பட்டா வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தனித்தனியாக தாசில்தார்
தனலட்சுமியிடம் வழங்கினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டு வந்து வீட்டுமனை மற்றும் பட்டா கோரி விண்ணப்பம் கொடுக்க முற்பட்டதால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.