
திருச்சியில் தளிர்கள் 2022 குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி
இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா முன்னிட்டு குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி (Fancy Dress) தளிர்கள்-2022 என்ற தலைப்பில் டிசம்பர் 4, 2022 ஞாயிறு மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.
ப்ரீ கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பிரிவினராக நடைபெற்றது. துவக்க நிகழ்வில் புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை T. யூஜின் தலைமையில் துவங்கியது. சைக்கோதெரபிஸ்ட் ஜாஸ்மின் லாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்போட்டியில் நடுவர்களாக காவிரி மகளிர் கல்லூரி பேராசிரியை இருதய புஷ்பம் பேராசிரியை ஹேமா கிருஷ்ணமூர்த்தி ஆசிரியை இருதய ராணி கலந்து கொண்டனர். தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் உள்பட கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் சேவை குறித்து பொருளாளர் ஜோ. அற்புத சகாயராஜ் அறிமுகப்படுத்தி அனைவரையும் வரவேற்றார். தலைவர் க. ரஞ்சித் குமார் மற்றும் செயலர் அ. அந்தோணி ஜெய்கர் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கவுரவப்படுத்தினர்.
பிரிவு வாரியாக நடைபெற்ற போட்டியில் Pre KG முதல் 5 ம் வகுப்பு பள்ளி. மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தது சிறப்பாக அமைந்திருந்தது.
விழா இறுதி நிகழ்வில் தலைமை விருந்தினராக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி அசிம், திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், மெடல்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், தன்னார்வப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், நடுவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசு வழங்கினார்.
200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும் 300க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவில் சிறப்பித்தனர்.
