
சிக்கியது குட்டிப்புலி!
மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் ஆறு மாதங்களுக்கு பிறகு வாகன தணிக்கையின் போது எதைச்சையாக சிக்கினார். திருச்சி சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த வாலிபரை விசாரித்தனர் . அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

சந்தேகமடைந்த போலீசார் ,அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற குட்டி புலி என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சோமரசம்பேட்டை மாருதி நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் 65 வயது மூதாட்டி ஹெலன் மேரி என்பவரிடம் சிகரெட் வாங்குவது போல நடித்து அவர் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை பறித்து சென்றார் என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
