
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கருணாநிதி. அரசுப் பேருந்து ஓட்டுனர். இந்நிலையில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் பேருந்து ஓட்டி வரும்போது அப்பகுதியில் சென்ற இறுதி ஊர்வல கும்பலை பேருந்து முந்தி சென்றது.

அக்கும்பலில் இருந்த பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ்,கௌதம் ஆகிய இருவரும் ஓட்டுநர் கருணாநிதியை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர்.
இதில் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பேருந்து ஓட்டுனர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விஜயராஜ் ,கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
