
திருச்சியில் இன்று மட்டும் 3 பேர் தற்கொலைகள்…
இளம்பெண் தற்கொலை
வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி உமாதேவி (29.). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆபரேட்டர் தற்கொலை


மருதாண்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை ( 40). டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர்.
தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சின்னதுரை ,தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
திருச்சி பாப்பாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கோபி(27 ). கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த கோபி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
