
காதலர்கள் தஞ்சம்
திருச்சி,டிச.10-
முசிறி வடக்கு சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி . தனியார் ஐ டி ஐ யில் வேலை பார்த்து வருகிறார். முசிறி கலிங்கா நகரை சேர்ந்தவர் காவியா (19). நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

பூபதியும் காவியாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி முசிறி கள்ளர் தெரு மாரியம்மன் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். முசிறி காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
பூபதி வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அடுத்து பூபதியின் பெற்றோரிடம் புதுமண தம்பதியரை எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து புதுமண ஜோடியை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
