
பணியில் சேர சென்ற ரயில்வே ஊழியர் விபத்தில் பலி
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா ( 39). பொன்மலைரயில்வே பணிமனை டீசல் பிரிவு அலுவலகத்தில் மஞ்சு மித்ரா பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் முதன்மை பணி மேலாளர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணி மாறுதல் பெற்ற அலுவல கத்திற்கு செல்வதற்காக இன்று காலை தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது புல்லட் இருசக்கர வாகனம் அவர் மீது பலமாக மோதியது. இதில் மஞ்சுமித்ரா சம்பவ இடத்தி லேயே பலியானார்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய இடத்தில் பணியில் சேர ஆர்வமோடு சென்ற அவர் வழியில் காலம் காத்திருக்கிறான் என்பதை அறியாமல் சென்றதைத்தான் விதி என்பார்களோ…
