
புயலின் தாக்கம்! திருச்சியில் அங்கன்வாடி கட்டிடத்தின் மீது விழுந்த மரம்!
திருச்சி ஶ்ரீரங்கம் புங்கனூர் கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பஞ்சாயத்து அலுவலகம் அங்கன்வாடி கட்டிடம் ரேஷன் கடை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டிடங்களுக்கு மத்தியில் தென்னை மரங்கள் புளிய மரங்கள் உள்ளன. அதில் தென்னை மரம் ஒன்று மாண்டஸ் புயல் காரணமாக அங்கன்வாடி கட்டிடத்தின் மீது விழுந்தது.
புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உடனடியாக அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
