
“பாபா”. ரீ ரிலீஸ் திருச்சி ரசிகர்கள் உற்சாகம்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருச்சி எல்.ஏ.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வாண வேடிக்கை மற்றும் பாபா படப்பெட்டி ஊர்வலம் நடந்தது.

ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில் இணைச் செயலாளர் கர்ணா ,எஸ்டி ராஜ் ராயல் ராஜ் ,சுதர்சன் பாலன் விடிவெள்ளி, ராஜ்குமார், அலெக்ஸ், நாசர் ,சத்தியா, ராஜேந்திரன் உள்ளிட்டா ஏராளமான மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு பாபா படத்தை வரவேற்று கோஷமிட்டனர்.
மேலும் 12ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் கோஷமிட்டனர்.
அதேபோல திருச்சியில் பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ள தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடித்தல் போன்ற உற்சாக நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
