
ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
தமிழக அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் திருச்சியில் நடைபெற உள்ளது. ஹாக்கி அணி தேர்வு 13 ம் தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்ட ரங்கிலும், கோகோ பெண்கள் அணித் தேர்வு 13 ம்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்ட ரங்கத்திலும், வாலிபால் போட்டி ஆண்கள், பெண்களுக்கு காலை 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கிலும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுப் போட்டிளில் கலந்து கொள்பவர்கள், 1.1.2004 அன்றோ, அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், 10ம் வகுப்புச் மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழுடன் வர வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இத்தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04312420685/ 7401703494 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
