முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி
முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது . ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன் மற்றும் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர் . வட்டார ஒருங்கிணைப்பாளர் பத்மா ,
வட்டார இயக்க மேலாளர் வெண்ணிலா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி ஆகியோர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து பேசினர்.
தொடர்ந்து, ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமையில் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
பேரணியில் வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுனர், சமூக வள பயிற்றுனர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
