NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

0
1

திருச்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!

தாபேட்டை ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிப் குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தா. பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1. 93 கோடி மதிப்பில் பாப்பாப்பட்டி முதல் சாலப்பட்டி வரையான சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் பாலம், மேலக் கொட்டம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 9. 14 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சுவர்,ரூபாய் 6. 52 லட்சம் மதிப்பில் மேல கொட்டம் முதல் பூலாஞ்சேரி வரை அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் வடிகால், கோணப்பம்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2. 61 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலையுடன் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால், ரூபாய் 6. 71 லட்சம் மதிப்பில் அரசமரம் அருகே களம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 7. 55 லட்சம் மதிப்பில் ஆகாச குமரி ஆற்றுவாரியில் முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் தடுப்பணை, ஜடமங்கலம் கிராமத்தில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் வீட்டின் கட்டுமான பணி, 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை குப்பை குழிக்கு அமைக்கப்பட்டு இருக்கும் சுற்றுச்சுவர், ஆண்டிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 3. 48 லட்சம் மதிப்பில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தின் பழுது நீக்கும் பணிஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

4

ஆண்டிப்பட்டி துவக்க பள்ளிக்கு சென்ற அவர், மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஊரக்கரை ஊராட்சியில் பெருகனூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சிறு பாலத்துடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருக்கும் பணிகளையும் தேவானூர் ஊராட்சி புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் செயல்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க அறிவுறுத்தினார்.

3

தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் வெங்காய பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் ரூபாய் 20000 மானியத்திற்கு விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் மற்றும் இடுபொருள்களையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து முசிறி வட்டம் வாளசிராமணி அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருச்சி கலெக்டர் ஆய்வின்போது முசிறி கோட்டாட்சியர் மாதவன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா தோட்டக்கலை துறை துணை இயக்குனர் விமலா, முசிறி தாசில்தார் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, வேளாண் அலுவலர் நந்தகுமார், ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், குணசேகரன் ,உதவி பொறியாளர் ஜெயசுதா, ஒன்றிய குழு துணை தலைவர் மல்லிகா பெரியசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.