
ரேசன் அரிசி பறிமுதல்
திருச்சி,டிச.10-

மணப்பாறை-
குளித்தலை சாலையில் கலிங்கப்பட்டி பிரிவு சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு செய்தனர்.
அப்போது வந்த
TN 51 எம்-2758 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதைக் கண்ட ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
மேற்படி வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது 55 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2750 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
