
டிடிவி தினகரனக்கு நான்கு அடி உயர காலண்டர் பரிசு!
சென்னையில் நடைபெற்ற அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திருச்சி மாநகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் எடத்தெரு எம்.கே.குமார் 2023ம் ஆண்டிற்கான (டிடிவி தினகரன் உருவப்படம் அச்சடிக்கப்பட்ட) 4 அடி உயர காலண்டரை பரிசாக வழங்கினார்.
4 அடி உயர காலண்டரை பெற்றுக்கொண்ட டிடிவி தினகரன்
எம்.கே.குமாரின் பணி சிறக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாநில செயலாளர் முத்துக்குமார் உடன் இருந்தார்.
